Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை அதிகரித்த சன் பார்மா பங்குகள்

சன் பார்மாவின் ரான்பாக்ஸி (Ranbaxy) நிறுவனம் மற்றும் அதன் அமெரிக்க துணை நிறுவனங்கள் மற்றும் அதன் கூட்டு நிறுவாங்களான சிஃபர் (Cipher), கெலிபர் (Galephar),  போன்ற நிறுவனங்கள் அக்டேவிஸ் (Actavis)  நிறுவனத்துடன் அப்சோரிகா (Absorica) மருந்துக்கான காப்புரிமை வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த அப்சோரிகா மருந்து முகத்தில் மற்றும் உடலில் பல பாகங்களில் வரும் ஒரு விதமான கட்டிகளை (Acne) போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ரான்பாக்ஸி மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் ஆக்டாவிஸ் உடன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தின் படி ஆக்டேவிஸ் நிறுவனம் 2020 டிசம்பர் வரை ஜெனரிக் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட அப்ஸாரிகா மருந்தினை விற்றுக் கொள்ளலாம்.
 
இதற்கு முன் சன் பார்மா நிறுவனம் அமெரிக்காவின் இன்சைட் விஷன் என்கிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிறுவனத்தின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 0.35 டாலருக்கு ரொக்கமாக வாங்குவதாகவும் இருந்தது. இதனால்  சன் பார்மாவின் பங்குகள் பி.எஸ்.இ யில் 1.21 சதவிகிதமும், என்.எஸ்.இ யில் 1.24 சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ