Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெடிலா நிறுவனத்தில் பங்கு பிரிப்சௌ

கெடிலா ஹெல்த் கேர் நிறுவனத்தின் பங்குகள் நாளை (7 அக் 2015) 1:5 என்கிற விகிதத்தில் பிரிக்கப்பட (Stock Split) இருக்கிறது. அதாவது 5 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகள் ஒரு ரூபாய் முக மதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்கப்பட இருக்கிறது. 

பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மிக அதிகமாக உயர்ந்திருக்கும் போது தான், தன் பங்குகளின் விலையை குறைக்க இந்த ஸ்டாக் ஸ்பிளிட் செய்யப்படும். அப்போது தான் பங்கின் விலை குறைந்து சிறு முதலீட்டாளர்களும் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். கெடிலா நிறுவனத்தின் பங்கு 2015ல் மட்டும் 30 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது. இந்த காலத்தில் எஸ் அண்ட் பி பி.எஸ்.இ சென்செக்ஸ் 3 சதவிகிதம் இறக்கம் கண்டிருக்கிறது. 
 
இன்று காலை 9.55 மணி வரை மட்டும் 3,70,376 பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் சுமாராக 2 லட்சம் பங்குகளே வர்த்தகமாகி வந்த நிலையில் இன்று மட்டும் சுமாராக இரன்டு மடங்கு கூடுதலாக இந்த பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கவனித்தக்கது. தற்போது பி.எஸ்.இ யில் 1.43 சதவிகிதமும், என்.எஸ்.இயில் 1.26 சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close