Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.ஓ.பி - திருத்த நடவடிக்கை திட்டத்தால் பங்குகள் விலை இறக்கம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை திருத்த நடவடிக்கை திட்டத்தின் கீழ் இந்தியாவின் ரிசர்வ் வங்கி கொண்டு வந்திருக்கிறது.  ரிசர்வ் வங்கியானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக விஷயங்கள் மற்றும் அதன் விரிவாக்க விஷயங்களில் நேரடியாக தலையிடும், ஆனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்களில் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 
ஐ.ஓ.பி கடந்த காலாண்டுகளில் தொடர்ச்சியாக நஷ்டத்தையே பதிவு செய்திருக்கிறது. அதோடு கடந்த 2015 ஜூன் காலாண்டில் நிகர லாபம் வெறும் 14.7 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டி இருந்தது. 2014 ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் 271.7 கோடி ரூபாயை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2014 - 2015 நிதி ஆண்டில் 454 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக கணக்கு காட்டி இருக்கிறது. 
 
முதலீட்டு விகிதம் (Capital Adequacy ratio)  9 சதவிகிதத்திற்கு கீழ் இருப்பது, வாராக்கடன்கள் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருப்பது போன்றவைகள் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணங்களாகும். மேற்கூறிய நடவடிக்கைகளால் ஐ.ஓ.பி பங்குகளின் விலை நேற்று மும்பை பங்குச் சந்தையில் 2.3 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமானது. இன்ரும் இந்த இறக்கம் தொடர வாய்ப்பு இருக்கிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ