Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவிகிதம் - சர்வதேச நிதியம்

இந்தியாவின் 2015-16 நிதி ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறது சர்வதேச நிதியம் (IMF). இதே சர்வதேச நிதியம் ஜூலை 2015ல் இந்த நிதி ஆண்டிற்கு இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.  சர்வதேச நிதியம் மட்டும் இன்றி ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 7.8 சதவிகிதமாக குறிப்பிட்டிருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தற்போது 7.4 சதவிகிதமாக குறைத்திருக்கிறது.

 
சர்வதேச நிதியம் குறிப்பிட்டது போல இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவிகிதமாக குறைந்தாலும், உலகில் இந்தியா தான் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.  இந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜி.டி.பி 7 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி  7.3 சதவிகிதமாக இருந்தது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ