Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெங்காய விலை ஏற்றத்தில் வர்த்தகர்களுக்கு 8,000 கோடி ருபாய் லாபம்.

இந்தியாவின் திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டிருக்கின்ற நிதி அயோக் நடத்தியஆய்வில் வெங்காய வர்த்தகர்கள் வெங்காய விலை ஏற்ற காலங்களான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 8,000 கோடி ரூபாய் வரை லாபம் பாத்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். 
 
இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 10 லட்சம் டன்னுக்கு அதிகமாக வெங்காயம் விற்பனையாகின்றன. வெங்காய விலை ஏற்றத்தின் போது ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த ஆண்டு  இதே கால கட்டத்தில் இந்தியா முழுவதும் சராசரியாக ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
 
இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட பெரும்பாலான வெங்காயம் மழையால் சேதமடைந்தது. அது மட்டுமின்றி மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறான வறண்ட வானிலை வெங்காய பயிர்களின் விதைப்பையே தாமதப்படுத்தின என்பது குறிப்பிடத்தகக்து. ஆக இந்தியாவில் பரவலாக ஏற்பட்ட வெங்காய தேவையை பயன்படுத்தி வெங்காய வர்த்தகர்கள் கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP