Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

இந்திய வங்கிகள் பெரும்பாலவைகளுக்கு வரும் 21ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமை தொடங்கி 25ம் தேதி ஞாயிறு வரை 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் 21ம் தேதி ஆயுத பூஜை, 22ம் தேதி விஜயதசமி, 23ம் தேதி மொஹரம், 24ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதுதான்.

இப்படி தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை இருக்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பே மக்கள் தங்கள் பணப்பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வங்கிகள் வெள்ளிக் கிழமையன்று இயங்க வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான தனியார் வங்கிகளுக்கு 5 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ