Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோசாஃப்ட் பேண்ட் அறிமுகம்!

உலகின் முன்னணி கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் புதிய வகை கையில் அணியும் பேண்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பேண்ட் என்று அழைக்கப்படும் இது கடந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விடவும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

அழகான தோற்றம், அடக்கமான வடிவமைப்பு என அசத்தும் இந்த மைக்ரோசாஃப்ட் பேண்ட் நம்முடைய அன்றாட வேலைகளை நினைவுபடுத்தும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய பிட்னஸ் சம்பந்தமான செயல்களையும் கணக்கிட முடியும்.

கைகளில் அணியக்கூடிய வகையில் உள்ள இந்த பேண்ட், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் உள்ளிட்ட தளங்களிலும் இயங்குமாம். இதன் ஆரம்ப விலை 249 டாலர் (இந்திய ரூபாயில் 16 ஆயிரத்துக்கும் மேல்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ