Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய சந்தை சென்செக்ஸ் 26972

9.30 மணி நிலவரம்

சென்செக்ஸ் 63.14 புள்ளிகள் குறைந்து 26972.71 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.75 புள்ளிகள் குறைந்து 8159.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்று காலையும் சுமாராக இதே புள்ளிகளில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது.

வங்கி, வங்கி நிஃப்டி, கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.  கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஐ.டி, போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 66 ரூபாய் குறைந்து 26,555 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒரு கிலோ வெள்ளி 168 ரூபாய் அதிகரித்து 37,501 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 3,162 ருபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு 65.18 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
நேற்று ஏற்றத்தில் தொடங்கி ஆசிய சந்தைகள் இன்று இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. நேற்றைய வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்திருக்கின்றன. அமெரிக்க சந்தைகளும் சற்றே ஏற்றத்தில் நிறைடவடைந்திருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள் : (%)
வேதாந்தா 1.82
இன்ஃபோசிஸ் 1.22
டாடா மோட்டார்ஸ் 1.22
ஹெச்சிஎல் டெக் 1.20
விப்ரோ 1.20 

இறக்கப் பங்குகள் : (%)
ஐடிசி -2.17
ஐடியா செல்லூலர்-1.79
பார்தி ஏற்டெல்  -1.31
ஐசிஐசிஐ பேங்க் -1.24
பாஸ்ச் -1.15
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ