Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோனி 'சோனி மியூசிக்'கை விற்க முடிவு?

உலகின் மிகப்பெரிய இசைப் பதிப்பு நிறுவனமான சோனி, தனது சோனி/ஏடிவி மியூசிக் பப்ளிஷிங் நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி வெளியிட்டுள்ளது. சோனி மியூசிக் பப்ளிஷிங் நிறுவனத்தில் 50% மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட்டுக்குச் சொந்தமானவை.


சோனி, தனது மியூசிக் பப்ளிஷிங் நிறுவனத்தின் பங்கை வரும் டிசம்பரில் விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எவ்வளவுக்கு விற்க போகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.


சோனி மியூசிக் முக்கிய விஷயங்கள்:


1. சோனி நிறுவனத்தின் சோனி/ஏடிவி மியூசிக் தொழிலின் மதிப்பு கிட்டதட்ட 2 பில்லியன் டாலர்.
2. உலகப் புகழ்பெற்ற பல மியூசிக் ஆல்பங்கள் சோனி நிறுவனத்திற்கு சொந்தமானவை. மைக்கேல் ஜாக்சன் ஆல்பம், பீட்டில்ஸ் சாங்ஸ் என அதன் பட்டியல் மிக நீளமானவை.
3. 1995இல் சோனி, மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து இசைத் தொழிலை செய்யத் தொடங்கியது. அதற்கு பத்தாண்டுகளுக்கு முன், ஜாக்சன் ஏடிவி நிறுவனத்தை ஆஸ்திரேலிய தொழிலதிபர் ராபர்ட் ஹோல்ம்ஸ் இடமிருந்து வாங்கினார். அதன் மூலம் பாடகர் பால் மெகார்ட்னியின் பாடல்கள் உரிமை ஜாக்சனுக்கு வந்தது.
4. டெய்லர் ஸ்விஃப்ட், லேடி காகா, குயின் மற்றும் கான்யி வெஸ்ட் போன்ற உலகப் பிரபல பாடகர்களின் உரிமையையும் சோனி நிறுவனம் வைத்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ