Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டெலினார்' இலவச ஆயுள் காப்பீடு - இந்தியாவிலேயே முதன்முறை

டெலினார் தொலைபேசி சேவை நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. டெலினார் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதனை டெலினார் சிஇஓ விவேக் சூட் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் டெலினார் 'சிம்' பயன்படுத்தும் 4.75 கோடி மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50000 வரை ஆயுள் காப்பீடு வழங்கவுள்ளது. இது முற்றிலும் இலவசம், எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரீசார்ஜ் மட்டுமே.


வாடிக்கையாளர்கள் மாதம் ரீசார்ஜ் செய்யும் தொகை, நூறு மடங்காக கணக்கிடப்பட்டு ஆயுள் காப்பீடு தொகை வழங்கப்பட இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ