Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' நூடுல்ஸ்: ஃபியூச்சர் குழுமத்துடன் இணைந்து விற்பனை

பாபா ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி (PATANJALI) நிறுவனம் ஃபியூச்சர் நிறுவனத்துடன் இணைந்தது. இனி பதஞ்சலி நிறுவனத்தின் ஆயூர்வேத பொருட்கள் ஃபியூச்சர் கடைகளில் விற்பனை செய்யப்படும்.மேலும் நூடுல்ஸ் போன்ற புதிய புதிய பிராண்டுகளை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கின்றன.


எங்களது விற்பனையகங்களின் மூலம் இப்போதைக்கு மாதத்தில் 30 கோடி ரூபாய் முதல் 40 கோடி ரூபாய் வரை பதஞ்சலி நிறுவன பொருட்களின் விற்பனை இருக்கும். கூடிய விரைவில் இதனை 80 கோடி ரூபாயாக உயர்த்த விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்தார்.


நூடுல்ஸ் தவிர, பாஸ்தா, ஓட்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட வற்றையும் விரைவில் அறிமுகப் படுத்தும் திட்டத்தில் இருக்கிறோம். நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ