Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ. 3,398 கோடி: சிஎஃப்ஓ ராஜினாமா

முன்னணி ஐடி துறை நிறுவனமான இன்ஃபோசிஸ் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. அதன் நிகர லாபம் ரூ. 3,398 கோடி.


இன்ஃபோசிஸ் ஐடி துறையில் வேகமாக வளர்ந்து வருவதையும், அந்த வளர்ச்சி மகிழ்ச்சி தருவதாகவும் அதன் சிஇஓ மற்றும் இயக்குநர் விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.


இன்ஃபோசிஸ் 2015-16 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 15,635 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் ஈட்டியிருந்த லாபத்தைக் காட்டிலும் 12.1 சதவிகிதம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

 


இந்த நிலையில் அதன் முதன்மை நிதி அதிகாரி ராஜிவ் பன்சால் பதவி விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ரங்கநாத் பொறுப்பேற்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close