Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சொதப்பிய ஃப்ளிப்கார்ட் - விலையில் வெளுத்த பிக் பில்லியன் டே சாயம்!

சென்ற வருடம் பல சொதப்பல்களை செய்து மாட்டிக்கொண்ட ஃப்ளிப்கார்ட் இந்த வருடம் சிக்கல்கள் இல்லாமல் பிக் பில்லியன் டே விற்பனையை நடத்தும் என்று கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ஆப்ஸ் விற்பனை தான் என்றும் கூறி ஆப்ஸ் டவுன்லோட் எண்ணிக்கையை கூட்டியது. ஆனாலும் ஃப்ளிப்கார்ட் சொதப்ப தவறவில்லை. ஆஃபர் என்ற பெயரில் ஃப்ளிப்கார்ட் செய்துள்ள சொதப்பல்கள் இதோ...

ஃப்ளிப்கார்ட் தளத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு செருப்பின் விலை ஆஃபர் விலையில் ரூபாய் 567 என்று கூறப்பட்டுள்ளது.


அதே சமயம் செல்ஃபோன் ஆப்ஸில் இதே செருப்பின் விலை ரூபாய்: 538. இதனை 53 சதவிகித தள்ளுபடி என்று ஃப்ளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த விலை என்பது இந்த பொருளை வாங்க செல்லும் இந்த பக்கத்தில் மட்டுமே உள்ளது இதனை வாங்க செல்லும் பேமண்ட் பக்கத்திற்கு செல்லும் போது அதன் விலை மாறியுள்ளது.


இணைய பக்கத்தில் இதன் விலை ரூபாய் :1092

 

ஃப்ளிப்கார்ட் ஆப்ஸில் பேமண்ட் பக்கத்தில் இதன் விலை ரூபாய்: 982

 


இதன் ஜூலை மாதத்திலிருந்து இந்த செருப்பின் விலை எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பதை விவரிக்கும் வரைபடம்:

 

இது போன்ற விலை குறைவான பொருட்களின் விலையே இவ்வளவு மாறுதல்கள் நடந்திருக்கிறது என்றால் விலை அதிகமுள்ள பொருட்களின் விலையில் நாம் எவ்வளவு தொகையை இழந்திருப்போம் என்கிறார்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள்.

சென்ற வருடம் தான் ஃப்ளிப்கார்ட் சொதப்பல்களை செய்தது என்றால் இந்த வருடமும் பிக் பில்லியன் டேயில் சொதப்பி வருகிறது.

சென்ற வருட சொதப்பலை படிக்க:  http://www.vikatan.com/news/article.php?module=news&aid=33701

இது போன்ற விலை மாறுதல்களை கண்டுபிடிக்க பெரிய தொழில்நுட்ப விஷயங்கள் தேவையில்லை நீங்களே கவனமாக செயல்பட்டால் இதனை எளிதில் கண்டுபிடிக்கலாம்:

ஆன்லைன் ஆஃபர் சமாளிக்க 13 வழிகள் கட்டுரையை படிக்க:  http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10984

 

வீடியோ வடிவில் காண:

 

 

-ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ