Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் விற்பனைக்கு தடை கோரி போராட்டம்: 8 லட்சம் மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பதற்கு தடை கோரி மருந்து கடை வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் அதிகளவில் பரவி வருகிறது. இந்த நிலையில், மருந்து விற்பனையையும் ஆன்லைனில் தொடங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு மருந்து கடை வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையும் மீறி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன.


‘பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடங்கியுள்ள இன்று மருந்து விற்பனை வணிகர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 13-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8 லட்சம் மருந்துக் கடைகள் நேற்று நள்ளிரவு முதல் அடைக்கப்பட்டன. அவற்றில் பணியாற்றும் 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதனால், அவசர தேவைகளுக்குகூட மாத்திரை, மருந்துகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ