Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஎஃப்ஏ கேலக்ஸி கருத்தரங்கம்


சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உயர்வு..!


ஆறாவது ஐஎஃப்ஏ கேலக்ஸி {IFA (Independent Financial Advisors) GALAXY} கருத்தரங்கம் சென்னை அருகே மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஏ. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

ஐஎஃப்ஏ கேலக்ஸி ஆண்டு மலர் வெளியீட்டின் போது...


அப்போது அவர் "பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கம் பற்றி கவலைப்படாமல் முதலீடு செய்வதற்கான ஒரு முதலீட்டு வாய்ப்பு மியூச்சுவல் ஃபண்டில் இருக்கிறது. அண்மைக் காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடுகள் பங்குச் சந்தைக்கு திரும்பி இருப்பது ஆரோக்கியமான போக்கு. மேலும், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிராவிடென்ட் ஃபண்ட் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அண்மையில் நிறைவேறி இருக்கிறது. இதனால், பங்குச் சந்தைக்கு தொடர்ந்து முதலீடு வந்து கொண்டிருக்கும். சமீப காலத்தில் பெரு நகரங்களை விட சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வளர்ச்சி அதிகரித்திருக்கிறது." என்று குறிப்பிட்டார்.


ஐஎஃப்ஏ கேலக்ஸி அமைப்பின் தலைவர் ஏகே.நாராயணன், "நிதி ஆலோகர்கள், மியூச்சுவல் ஃபண்ட்களின் அறிவை மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. இது அவர்களின் அடுத்துக்கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. சிறு நகரங்களில் இருந்து கூட ஆலோசகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்." என்றார்.


மேலும், இந்தக் கருத்தரங்கில் ஹெச்டிஎஃப்சி  செயல் இயக்குநர் பிரசாந்த் ஜெயின், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் சிஇஓ சுனில் சுப்பிரமணியம், ஆம்ஃபி சிஇஓ சி வி.ஆர் ராஜேந்திரன், மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் எம்டி ஆஷிஷ் பி சோமையா, ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் தலைவர் (ரீடெய்ல் பிசினஸ்) அமர் ஷா உள்ளிட்டோர் பேசினர்.   


 இதில் நூற்றுகணக்கான தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் (ஐஎஃப்ஏக்கள்) பங்கேற்றனர்.


- சி.சரவணன்





 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ