Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (19.10. 2015)ஏற்றத்தில் வர்த்தகமானது. இந்த வார சந்தை தொடக்க நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகியுள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  150.32 புள்ளிகள் அதிகரித்து 27,364.92 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.90 புள்ளிகள் அதிகரித்து  8,275.05 என்ற நிலையில் வர்த்தகமானது.

ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல், டாக்டர் ரெட்டிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ