Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரமாக விளம்பரத்தில் இறங்கும் மேகி: குஜராத், கர்நாடகாவில் தடை நீக்கம்

குஜராத், கர்நாடக மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டன.  சில மாதங்களுக்கு முன் நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூன்று ஆய்வு சோதனைகளில் நேர்மறையான முடிவுகளைப் பெற்றுள்ளது.

 

மேகி நூடுல்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மாகி விற்பனைக்கு தமிழகம், குஜராத், கர்நாடக அரசு தடை விதித்திருந்தது.


இந்த நிலையில் மூன்று ஆய்வு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 90 மாதிரிகள் இவ்வித சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.


தற்போது குஜராத், கர்நாடகாவில் தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸை விளம்பரத்தில் தீவிரமாக களமிறங்க உள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ