Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இண்டிகோ அடுத்து கோஏர்: வரிசை கட்டும் ஐபிஓ-க்கள்

விமான போக்குவரத்தில் தற்போது அதிக லாபம் அடையும் நிறுவனங்களான இண்டிகோ மற்றும் கோஏர் இரண்டு நிறுவனங்களும் பொதுப்பங்கு வெளியிட முடிவு செய்துள்ளன.

 

 

 

 

 


இண்டிகோ நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக வாடியா குழுமத்தின் பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான கோஏர் விரைவில் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் செபியிடம் விண்ணப்பத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.


கோஏர் நிறுவனத்தில் 19 ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. 20-வது விமானத்தை அடுத்த வருடம் ஏப்ரலில் இயக்க இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ