Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸிடம் விழுந்தது விப்ரோ

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ 2015ஆம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தைக் காட்டிலும் குறைவான லாப வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
 
2015-16 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. இதில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 12,513 கோடி. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருமானம் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதன் நிகர லாபம் 7 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2235 கோடியாக உள்ளது. 
 
ஆனாலும் இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபத்தைக் காட்டிலும் குறைவு. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3398 கோடி ஆகும்.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ