Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நவின்' ஸ்-க்கு சிறந்த அபார்ட்மென்ட் கட்டுமானத்திற்கான ஐசிஐ - அல்ட்ராடெக் விருது

சென்னையின் பிரீமியம் குடியிருப்பு கட்டமைப்பான நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ். ஐசிஐ ( சென்னை மையம்) - அல்ட்ராடெக் 2015 விருதை வென்றிருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் மற்றும் அழகிய கட்டடக்கலைநயத்துடன் சர்வதேச MIVAN  ஃபார்ம் ஒர்க் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேடவாக்கத்தில் கட்டமைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்டார்வுட் டவர்ஸ்க்கு சிறப்பாக கட்டப்பட்ட அபார்ட்மென்ட் என்ற விருது அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய கான்கீரிட் இன்ஸ்டிட்யூட்  இணைந்து நடத்திய கான்கீரிட் தின விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது சிறந்த கட்டுமானங்களை கட்டுவதில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு விருதாகும்.

இந்த விருது குறித்து நவின் ஹவுசிங் அண்ட் ப்ராபர்ட்டீஸ், மேலாண்மை இயக்குநர் டாக்டர் R.குமார் கூறுகையில் , " நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் அண்டைப் பகுதியாக சென்னை, மேடவாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ், வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன வசிக்கும் இடத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிநவீன MIVAN தொழிற்நுட்பத்தைக் கலந்து திறம்பட திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. ஐசிஐ-யிடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பது என்பது எங்களுடைய திட்டத்தில் கிடைக்ககூடிய கட்டுமான தரத்திற்கும் மற்றும் வசதிகளுக்கும் கிடைத்த ஒப்புதல் அங்கீகாரமாகும் . இது போன்ற விருதுகள் இன்னும் அதிக கவனத்துடன் வீடுகள் கட்டுவதையும் மற்றும் புத்தாக்க பாதையில் எங்களுடைய பயணத்தை ஆர்வத்துடன் தொடர்வதற்கு ஊக்கமளிக்கின்றன " என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ