Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியச் சுகாதார பராமரிப்பு துறையில் வளர்ந்து வரும் ட்ரெண்ட்கள்


   இந்தியாவில் பெருமபாலான தொழில்துறைகள்  தூசித் தட்டிக்கொண்டிருக்க சுகாதார பராமரிப்பு  துறையானது பெருமளவில் வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய இடத்தில் முன்னணிக்கு வந்திருக்கிறது . அதிலும் இப்போட்டியில் தனியார் சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பில் சென்னை முன்னணியில் இருக்கிறது .இவை மட்டுமில்லாமல் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள், " ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் " நடத்திய " இந்தியச் சுகாதார பராமரிப்பு துறையில்  வளர்ந்து வரும் ட்ரெண்ட்கள்" என்னும் கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கின்றன.


இக்கருத்துக்கணிப்பில் 7.21கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை  , பல்வேறு பெருநிறுவன ஆஸ்பத்திரிகளுக்கும், நவீன தொழில்நுட்பங்களை மிக எளிதில் பெருவதற்கான வாய்ப்புகளுக்கும் இல்லமாக திகழ்வது தெரியவந்திருக்கிறது.

இந்தக் கருத்துக்கணிப்பு பற்றி ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.பிரகாஷ் , எம்.எஸ், எஃப் ஆர் சிஎஸ்( Glasg), எஃப் ஏ ஐ எஸ்  கூறுகையில் ," ஸ்டார் ஹெல்த்தை பொறுத்தவரையில் , நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் மூலம் ஆராய்ந்து அறிந்து இன்றைக்குள்ள ட்ரெண்ட்களுக்கேற்ற வகையில் புதுமையான தீர்வுகளையும் எங்களது சேவைகளில் மேம்பாட்டையும் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கும் இத்துறைக்கும் அளிப்பதில்,மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய மறுசீராய்வு எங்களை வெறும் காப்பீட்டு சேவைகளை அளிக்கும் நிறுவனமாக மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. அதேபோல் அரசாங்கத்துடனும் இத்துறையிலும் மிகவும் அர்த்தமுள்ள ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்ள பெரிதும் உதவுகிறது" என்றார்.

       வெறும்  3.5% இந்தியர்கள் மட்டும் தங்களுக்கென  தனியாக சுகாதார காப்பீட்டைப் பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் மருத்துவச் செலவுகளில் 75% மக்கள் தங்கள் கையிலிருந்தே கொடுக்கின்றனர்
தற்போது இந்தியா மிக உயர்தொழில்நுட்ப உடல் பரிசோதனைகளுக்கான சேவைகளின் இடமாகவும், மிக நவீன உடல்பரிசோதனை வசதிகளுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாடாகவும் திகழ்கிறது என்பது தெரிய வருகிறது
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ