Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனிய பயணத்துக்கு உதவும் ஏமி !

இரவு 9 மணி.

நீங்கள்  உங்கள் ஆபீஸில் லேப்டாப்பை அனைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மெயில் வருகிறது , திரு.அஷோக்கிடமிருந்து . ' உங்களை சந்திக்கத்  தயார் ' என்று. இவரை சந்திப்பது மிகவும் முக்கியம் ... ஆனால் அந்த சந்திப்பிற்கான நேரத்தையும்  இடத்தையும்  கலந்து ஆலோசிக்கும் சக்தியோ ஆர்வமோ இப்போது உங்களிடம் இல்லை. நீங்கள் திரு.அஷோக்கிற்கு ஒப்புதல் மெயில் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள் .

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
'ஹலோ அஷோக் , உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி .நமது சந்திப்பிற்கான நேரத்தையும் இடத்தையும் ஏமியுடன் கலந்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி.'
 
உங்கள் உதவியாளர் (personal assistant) ஏமிக்கு சிசி செய்கிறீர்கள் (amy@x.ai). அவ்வளவுதான். நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுகிறீர்கள். 
 
ஏமி : ஹலோ அஷோக் , உங்களுடனான மீட்டிங்கை எப்போது வைத்துக்கொள்ளலாம்? எங்கள் பாஸ் அடுத்த வாரம் புதன்கிழமை காலை 10.00 மணிக்கும்  வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கும்  ஃப்ரீயாக இருக்கிறார் .
 
அஷோக் : ஹாய் ஏமி , புதன் காலை 10 மணிக்கு என்னுடைய ஆபீஸில் மீட்டிங் ஏற்பாடு செய்யலாமா ? 
 
ஏமி : ஹாய் அஷோக் ,பாஸால்  நிச்சயமாக வரும் புதன்கிழமை உங்களை சந்திக்க முடியும் . ஆனால் அன்று அதன் பிறகு இருக்கும் மற்றொரு சந்திப்பின்  காரணமாக , உங்கள் சந்திப்பை தயவுசெய்து அண்ணா சாலையில் இருக்கும் எங்கள் ஆபீசில் காலை 10.00 மணிக்கு  வைத்துக்கொள்ள முடியுமா ? 
 
அஷோக் : நோ ப்ராப்ளம் ஏமி .வழியில் தானே இருக்கிறது . புதன் காலை 10 மணிக்கு சந்திக்கலாம். இன்றுஇனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் . 
 
செவ்வாய் இரவு உங்களுக்கும், அஷோக்கிற்கும் நினைவூட்டல் மெயில் ஒன்று ஏமியிடம் இருந்து வருகிறது .புதன்கிழமை மீட்டிங் இரண்டு நிறுவனங்களுக்குமே நன்மையில் முடிகிறது.
 
இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் .. உங்கள்  அசிஸ்டென்ட் எமி ஒரு பெண் இல்லை, அது ஒரு கம்ப்யூட்டர் என்றால், ஏதோ இருக்கிறது தானே!
 
ஆம் . ஏமி ஒரு கம்ப்யூட்டர். செயற்கை அறிவுத்திறம் அதாவது ஆர்டிபிசியல் இன்டெல்லிஜென்ஸ் பெற்ற கம்ப்யூட்டர்.  X.ai (ai stands for artificial intelligence)  என்ற நிறுவனத்தின் சேவை தான் இந்த ஏமி. முழுப்பெயர் ஏமி இன்கிராம் ( AmyIngram - again AI . N-gram in her surname is a technique used in computational linguistics). 
 
அவளுக்கென்று ஒரு தனி லின்கெட் இன் ப்ரோபயிலும் உள்ளது . (www.linkedin.com/in/amyingramnyc)
ஏமி என்பது உங்களுக்காக உங்கள் மீட்டிங்குகளை ஷெட்யூல் செய்யும் ஒரு ஆன்லைன் சேவை.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் காலெண்டரை ஏமியுடன் ஷேர் செய்வது மட்டுமே . 
 
எக்ஸ்.ஏ.ஐ நிறுவனத்தின் சி.இ.ஒ டென்னிஸ் மார்டென்சன் தன்னுடைய மீட்டிங்குகளை ஷெட்யூல் செய்யும்போது ஏற்பட்ட கடுப்பினால் பிறந்தவள் தான் ஏமி. இப்போது இவள் அமெரிக்காவெங்கும் பல்லாயிரக்கணக்கான மீட்டிங்குகளை ஷெட்யூல் செய்துகொண்டிருக்கிறாள் .
 
ஏமியின் மொழி அநியாயத்துக்கு மனிதர்களைப்போல் போல் இருக்கும் .உங்களால் சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது .உங்களுக்கு எங்கு லஞ்ச் மீட்டிங் வைத்தால் வசதி என்பது முதல் என்ன காஃபி பிடிக்கும் என்பது வரை அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்வாள் . 
 
நீங்கள் கேட்கலாம் , அது ஏன் இந்த அல்கோரிதம் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , அது ஒரு ஆணாக இருக்கக் கூடாதா ? இருக்கிறது . இல்லை இல்லை , இருக்கிறான் . அவன் பெயர் ஆன்ட்ரூ (andrew@x.ai) . எனினும் பலர் ஏமியையே விரும்புகிறார்கள் .
 
 நீங்கள் மீட் செய்ய விரும்பும் அந்த மனிதரும் ஏமியை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று தானே கேட்கிறீர்கள் .. அதற்கும் பதில் இருக்கிறது . உங்கள் இருவரின் காலெண்டரையும் அவளே பார்த்து எளிதில் வேலையை முடித்துவிடுவாள் . 
 
மற்றொரு முனையில் இருப்பவர் பதிலளிக்காவிட்டால் , மூன்று முயற்சிகளுக்குப் பின் அதை உங்களிடம் பணிவுடன் தெரிவித்துவிடுவாள் .  
 
"ஏமி , இந்த வாரம் நான் சுற்றுலா செல்கிறேன் " என்று அவளுக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும் . உங்கள் அத்தனை மீட்டிங்குகளையும் ரீஷெட்யூல் செய்துவிடுவாள் . ''இனிய பயணம் பாஸ் " என்று உங்களுக்கும் மெயில் வரும் .
 
அதே சமயம் அவள் நம் சமூகத்தின் கோட்பாடுகளை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்  . வாரவிடுமுறை நாட்களில் அடிக்கடி மெயில் அனுப்புவது , முக்கியமான பண்டிகைகளின் போது சந்திப்பை ஏற்பாடு செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் . இவற்றை சரி செய்துவிட்டால் ஏமி இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்காவில் மட்டும் 10 பில்லியன் மீட்டிங்குகளை ஏற்பாடு செய்வாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த இலக்கை எட்ட மார்டென்சன்னின் இடைவிடாத முயற்சி ,உலகெங்கும் உள்ள பர்சனல் அஸிஸ்டென்ட்களின் முடிவாக இருக்கும் என்று பலர் கொதித்துக்கொண்டிருக்கையில் , " ஏமி ஒரு வேலைக்  கொலையாளி அல்ல , அவள் உங்கள் நேரத்தை திறம்பட பயன்படுத்த உதவுபவள் " என்று கூலாக சொல்லிவிட்டு ஏமியை அப்டேட் செய்ய சென்றுவிட்டார் அவர்.
 
அ.ஸௌம்யா (மாணவப் பத்திரிகையாளர்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ