Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் சர்ச் வந்தாச்சு....!

எவ்வளவு தேடுதல் பொறிகள் வந்தாலும் கூகுள் தேடுதல் பொறிதான் இதுவரை நிகரற்றதாக வெல்ல முடியாததாக உள்ளது. இந்த நிலையில் இப்போது ஃபேஸ்புக் சமூக தளத்தில் தேடுதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் 'Search FYI' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஃபேஸ்புக்கில் பொதுவாகப் பதிவிடப்பட்ட பதிவுகளை நேரடியாக தேடிப்படிக்க ஒரு தேடுபொறி வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இனி எல்லோரும் ஃபேஸ்புக்கிலும் பிடித்த விஷயங்களைத் தேடிப் படிக்க முடியும். கூகுள் எல்லோருக்கும் ஆண்டவர் என்றாலும் ஃபேஸ்புக் தான் இப்போதைக்கு அனைவருக்கும் கனவுலகம். தேவையென்றால் தான் கூகுள் மற்ற நேரமெல்லாம் ஃபேஸ்புக்தான்.

எனவே கூகுளுக்கு சவாலாக ஃபேஸ்புக் சர்ச் மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ