Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருப்பு மட்டுமா, எல்லாம் தான் விலை உயருது: அசோசம்

கடந்த சில வாரங்களாக பருப்பு விலை உயர்ந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்போது குறையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் பருப்பு மட்டுமல்ல நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்திருக்கிறது என்று இண்டியன் இண்டஸ்ட்ரி ஆணையம் அசோசம் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.


அந்த ஆய்வின்படி இந்தியாவில் பருப்பு வகைகள் மட்டுமல்ல, ஆடைகள், கல்வி கட்டணம், மருத்துவ சேவை, அசைவ உணவுகள் உள்ளிட்ட விஷயங்கள் விலைவாசி உயர்வை சந்தித்துள்ளன.


கடந்த ஆண்டு முதல் பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது முரணான அதிர்ச்சியாக உள்லது.


பருப்பு விலை 30 சதவீதமும், மசாலா பொருட்களின் விலை 9.2 சதவீதமும், கல்வி மற்றும் மருத்துவம சேவைகளுக்கான செலவு முதையே 6 மற்றும் 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பருப்பு, பால், பால் பொருட்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களில் துவங்கி கல்வி, மருத்துவம், இஎம்ஐ வரை நடுத்தர மக்களின் அனைத்து பயன்பாடுகளிலும் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.


இந்த விலை உயர்வு நெருக்கடியை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ