Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு இன்ஷூரன்ஸில் அதிக முக்கியத்துவம்!

பெண்களுக்கு இன்ஷூரன்ஸில் அதிக  முக்கியத்துவம்!
 
பெண்களுக்கான இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சி வரும் 2030ம் ஆண்டுக்குள் 22-35 மில்லியன் டாலர் அளவுக்கு உயரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பெண்களின் உடல் நலம் மற்றும் வருமானம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருவதால் இன்ஷூரன்ஸின் தேவை உள்ளது. அதனால் இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சி வேகமாக இருக்கும். பார்தி ஆக்ஸா இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப் நடத்திய ஆய்வில் 2013ம் ஆண்டு 10 மில்லியன் டாலராக இருந்த இன்ஷூரன்ஸ் பிரீமியமானது 2 -4 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 22-35 மில்லியன் டாலராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. 
 
இன்ஷூரன்ஸ் துறையில் பெண்களுக்கான பகுதியானது மிகவும் முக்கியமாக இருக்கும்.பெண்களுக்கான இன்ஷூரன்ஸானது அதிக வளர்ச்சி அடையக்கூடிய சந்தையாக இருக்கும். 2013ம் ஆண்டுப் பெண்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் 0.05 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. இது வரும் 2030ம் ஆண்டு 0.1 - 0.16 மில்லியன் டாலராக இருக்கும். ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு இல்லாத இன்ஷூரன்ஸ் துறையில் 8.6 பில்லியன் டாலர், 1.1 பில்லியன் டாலர் 2013 வளர்ச்சி இருந்தது. இது வருகிற 2030ம் ஆண்டுக்குள் முறையே 17.7 - 27.6 பில்லியன் டாலராகவும், 4.4 - 6.9 பில்லியன் டாலராக இருக்கும். 
 
இன்ஷூரன்ஸ் துறையில் பெண்களுக்கான இன்ஷூரன்ஸ் வளர்ச்சி என்பது அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. 2008 - 2014ம் ஆண்டில் பெண்களின் பட்ட படிப்பறிவின் வளர்ச்சியானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் வருமானமும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் சொந்தமாகத் தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் 4.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ