Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடிஎஃப் நிர்வகிக்கும் தொகை ரூ. 1 லட்சம் கோடி?.!

என்எஸ்இ, இடிஎஃப் முதலீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் மும்பையில் 'இந்தியா இடிஎஃப் மாநாடு 2015 (India ETF Conference 2015)-ஐ நடத்தியது. 
 
இதில் செபி சேர்மன் யூ.கே.சின்ஹா பேசும் போது,"இந்தியாவில் இடிஎஃப் சந்தை கடந்த 12 வருடங்களில் 12 மடங்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது. " என்றார். 
 
என்எஸ்இ எம்டி சித்ரா ராமகிருஷ்ணா," இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இடிஎஃப் முதலீட்டை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மொத்த ஈக்விட்டி இடிஎஃப்-ல் என்எஸ்இ-ன் பங்களிப்பு 97% ஆக இருக்கிறது. விரைவில் என்எஸ்இ இடிஎஃப்-ல் நிர்வகிக்கும் தொகை ஒரு லட்சம் கோடியை எட்டும் "என்றார். 
 
தற்போது இந்தியாவில் நிர்வகிப்படும் இடிஎஃப் சொத்து மதிப்பு ரூ. 15,000 கோடியாக இருக்கிறது. இதில் ஈக்விட்டி இடிஎஃப் பங்களிப்பு ரூ. 8,920 கோடி. மீதி தங்கம் மற்றும் கடன் முதலீடுகளாக இருக்கின்றன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ