Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழைப்பு துண்டிப்புக்கு அபராதம் : ட்ராய்க்கு செல்போன் நிறுவனங்கள் எச்சரிக்கை

அழைப்பு துண்டிப்புக்கு அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டால், செல்போன் கட்டணங்களை உயர்த்த நேரிடும் என்று இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய (ட்ராய்) தலைவர் ஆர்எஸ் சர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் அழைப்பு துண்டிப்புக்கு தலா ஒரு ரூபாய் இழப்பீடு தரும் நிலை ஏற்பட்டால் செல்போன் கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ட்ராய்க்கு செல்போன் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் செல்போன் நிறுவனங்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் 15ம் தேதி டிராய் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ