Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேள்வி - பதில்

 மாதம் ரூ.8,000 வீதம் வருடத்துக்கு ரூ. 96,000 வாடகை செலுத்தி வருகிறேன். வாடகை செலுத்தியதற்கான ரசீது எதுவும் என்னிடமில்லை. நான் செலுத்தும் வாடகைக்கு வருமான வரி விலக்குப் பெற முடியுமா?

@ - சந்திரன், சென்னை,

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜிவிஎன் சங்கர் அண்ட் கோ.

``வீட்டு வாடகைக்கு வரி விலக்குப் பெற வாடகை செலுத்திய ரசீது அவசியமானது. நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். அலுவலகம் நீங்கள் சமர்ப்பித்த ரசீதின் உண்மைத் தன்மையை பரிசோதித்து உங்களின் வருமானத்திலேயே வரி விலக்கைத் தரும். வாடகை ரசீது இல்லையென்றால் வீட்டு வாடகைக்கு வரி விலக்கைப் பெற முடியாது.''

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ