Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலூன் மூலம் இன்டர்நெட் சேவை : கூகுள் கலக்கல்

இந்தோனேஷியா முழுவதும் 20,000 ஹீலியம் பலூன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்க உள்ளது.
இந்தோனேஷியாவில் இன்டர்நெட் வசதியை மேம்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் லூன் என்ற இத்திட்டத்தின் கீழ் தரை மட்டத்திலிருந்து 60 ஆயிரம் அடி உயரத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளது. இதன் மூலம் இந்தோனேஷியாவின் 17,500 சிறிய தீவுகளில் வசிக்கும் மக்கள் இணையதள வசதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷியாவில் உள்ள சில முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து இன்டர்நெட் வசதி சென்ற சேர வாய்ப்பில்லாத இடங்களில் பலூன்கள் மூலம் அதைத் தரும் திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ