Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் 1 லட்சம் கார்களை வோக்ஸ்வேகன் திரும்பபெறுகிறது?

ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஐரோப்பாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன், உலகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 10 லட்சம் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாட்டில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டது. இதன் பின் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்துவிட்டது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த மோசடியால் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் நஷ்டம் ஏற்பட்டது.


இந்த நிலையில் இந்தியாவில் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்யப்பட்ட 1 லட்சம் டீசல் கார்களை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு முன் வோக்ஸ்வாகன் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close