Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துவரம் பருப்பு விலை குறைந்தது!



நம் நாட்டில் துவரம் பருப்பு விளைச்சல் குறைவால் தமிழகத்தில் வரத்து சரிந்து விலை அதிகரித்து காணப்படுகிறது. பற்றாக்குறையால் விலை தொடர்ந்து உயர்ந்ததையடுத்து பெரு முதலாளிகள் துவரம் பருப்பை பதுக்கி வைக்கத் தொடங்கினர்.


இந்த நிலையில் பருப்பு பதுக்கல் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளதாலும், தமிழக அரசு நவம்பர் 1ம் தேதி முதல் ஒரு கிலோ துவரம் பருப்பு 110 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாலும் மொத்த விலை சந்தையில் துவரம் பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.


மொத்த விலை சந்தையில் துவரம் பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு 210 ருபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் மற்ற பருப்பு வகைகளின் விலை அதிகளவில் குறையவில்லை. தீபாவளிக்குள் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரை குறையும். மற்ற பருப்புகளின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் 75 ஆயிரம் டன் பருப்பு சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ