Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரசாயன தொழில் துறை 4 ஆண்டுகளில் ஜொலிக்கும்!


இந்திய இரசாயன தொழில் துறை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்திய இரசாயன தொழில் துறை வர்த்தகம் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடையவதற்கான சாத்தியம் உள்ளது.


இப்போது இந்தியாவில் இரசாயன தொழில் துறை வர்த்தகம் ஆண்டுக்கு 139 பில்லியன் டாலராக (ரு.9 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. ஆனால், உலகளவில் இரசாயன சந்தையுடன் ஒப்பிடும்போது இந்தியா இரசாயன சந்தையின் மதிப்பு வெறும் 3.3 சதவிகிதம் என்ற அளவில் தான் உள்ளது. எனினும் இந்திய இரசாயன தொழில் துறையின் வர்த்தகம் அடுத்த 4 ஆண்டுகளில் 214 பில்லியன் டாலரைத் (ரூ.13,91,000 கோடி ரூபாய் ) தொடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ