Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்!

 

கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசேம்) தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 2013-14ல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு 32 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 16.2 சதவிகிதம், உத்தரப்பிரதேசத்தில் 12.5 சதவிகிதம், கர்நாடகாவில் 7.2 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலதிபர்களுடன் தமிழக அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 178.5 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் 2009-10ம் நிதி ஆண்டில் 41,800 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது 2013-14ல் 1,16,390 புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக அதிகரித்துள்ளதாக அசோசேம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ