Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 108 கோடியாக உயர்வு

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் இன்று (29/10/15) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2015-16ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி வெளியிட்டு பேசினார்.

அதன் விவரம்:
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வணிகம் கடந்த ஆண்டைவிட 11 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 44,551 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் டெபாசிட் ரூபாய் 25,616 கோடியாகவும், கடன்கள் ரூபாய் 18,935 கோடியாக அதிகரித்துள்ளது.


கடந்த  அரையாண்டைவிட வங்கியின் மொத்த லாபம் 16 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 402 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 219 கோடியாகவும் அதிகரித்துள்ளது.


செப்டம்பர் 30 ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 15 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 107.84 கோடியாக அதிகரித்துள்ளதாக காமகோடி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ