Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் வெங்காயம் விலை உயர வாய்ப்பு!

வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லசால்கான் சந்தை ஆகும். இங்கு இருந்து தான் நாட்டின் பல பகுதிகளுக்கு வெங்காயம் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.


இங்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது லசால்கான் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 32 ஆக உள்ளது. பண்டிகை சீசன் என்பதால் வெங்காய தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் மேலும் விலை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது .

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ