Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சின்ன கார்பஸ்... நிறைய சந்தோஷம்... டிரை பண்ணுங்களேன்!


ஒரு மாலை வேளையில் டீக்கடை ஒன்றில் சுந்தரும் சந்தோஷும் பேசிய உரையாடல்...


சுந்தர்: மச்சி நம்ம ரமேஷை கவனிச்சியா, ஆறு மாசத்துக்கு ஒருமுறை கரெக்டா புது ஷூ வாங்கிடுறான். அதே மாதிரி இரண்டு வருஷத்துக்கு ஒரு புது போன். அதுவும் 12,000 ருபாய் பட்ஜெட்ல. அதோடு அவன் ட்ரெஸ்ஸிங்கும் சூப்பர்டா. எப்படிடா அவனால மட்டும் இது முடியுது?


சந்தோஷ்: ஆமா  மச்சான் எனக்கும் இந்த டவுட்டு ரொம்ப நாளா இருக்கு.


சுந்தர்: நாளைக்கு ஆபீஸ்ல லஞ்ச் டயத்துல அவனோட உக்கார்றோம். அது என்ன சீக்ரெட்டுனு கேக்குறோம். ஒகேயா?


சந்தோஷ்: கட்டாயம் மச்சான்.


மறுநாள் மதிய உணவு இடைவேளையின்போது...


சுந்தர்: என்ன ரமேஷ், புது ஷூவா, அதுவும் அடிடாஸ் போல இருக்கே. ஷூ எவ்ளோடா?


ரமேஷ்: 2,100 ரூபாய்டா.


சந்தோஷ்: சர்ட்டும் புதுசு போல இருக்கே?


ரமேஷ்: நான்தான் ரெண்டு மாசத்துக்கு ஒரு புது சட்டை போடறவனாச்சே!


சுந்தர்: ரமேஷ், உன்னால மட்டும் எப்படி இப்படி புதுசு புதுசா ஷூ, சர்ட்னு வாங்க முடியுது? ஆபிஸ் வேலை முடிஞ்சபிறகு ஏதாவது பார்ட் டைம் பிசினஸ் பண்றியா?


சந்தோஷ்: அப்படி ஏதாவது செஞ்சுகிட்டு இருந்தா எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுப்பா, நாங்களும் அதை செஞ்சு கொஞ்சம் காசு பாக்குறோம்.


ரமேஷ்: அதெல்லாம் ஒண்ணுமில்ல, உங்க மாதிரி நானும் வீட்டுக்கு போயிடறேன்; பார்ட்டைம் பிசினஸ், சைடு பிசினஸ்னு எதுவும் செய்யலை.


சுந்தர்: அப்ப உன் மாமா வீட்டு மூலமா ஏதாவது ஹெவியா வரும்படி வருதா...


ரமேஷ்: டேய் அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாதுடா...


சந்தோஷ்: அப்ப எப்படி உன்னால மட்டும் இந்த மாதிரி புதுசு புதுசா வாங்க முடியுது? அந்த ரகசியத்தை எங்ககிட்ட சொல்லு.


ரமேஷ்: ஒரு ரகசியமும் இல்லை. நான் எப்படி புதுசு புதுசா வாங்குறேன்னு சொல்றேன். தெளிவா கேட்டுக்குங்க.


சுந்தர்: சொல்லு, சொல்லு.


ரமேஷ்: மச்சி நாம எல்லாரும் 2000 டிசம்பர்ல ஒன்னா புரோமோஷன் வாங்குனப்ப கிடைச்ச ஃபர்ஸ்ட் போனஸ் (10,000 ருபாய்) அமெளன்டை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுல இன்வெஸ்ட் பண்ணிருக்கேன்னு சொன்னேன் இல்லையா?


சுந்தர்: ஆமா.. அதுக்கு என்ன இப்போ?


ரமேஷ்: அந்த பணம் 10 வருசம் கழிச்சு 2010-ல் 52,000 ரூபாயா அதிகரிச்சிருச்சு (சுமார் 18 சதவிகித வருமானம்). அந்த பணத்தை எடுத்து ஒரு நல்ல லிக்விட் ஃபண்டுல போட்டுட்டேன், வருஷத்துக்கு 8% சாலிடா வருமானம் கிடைக்குது. ஷோ, வருஷத்துக்கு 4,120 ரூபாய் கிடைக்குது. இந்த அமெளன்டை வச்சு தான் வருஷத்துக்கு இரண்டு தடவ நல்ல ஹை குவாலிட்டி ஷூ இல்ல செப்பல் வாங்குறேன்.


சந்தோஷ்: இந்த பார்றா... அப்ப இந்த டிரஸ் எல்லாம்....?


ரமேஷ்: நான் 2000 ஜனவரியில வேலைக்கு சேர்ந்ததிலிருந்து மாசம் 2,500 ரூபாய் வீதம் இரண்டு நல்ல ஈக்விட்டி ஃபண்டுல இன்வெஸ்ட் செஞ்சேன். அத 2011 ஜனவரிலதான் வெளிய எடுத்தேன். அது கிட்டத்தட்ட வருஷத்துக்கு 15 சதவிகிதத்துக்கு மேல ரிட்டன் கொடுத்துச்சு. நான் இன்வெஸ்ட் பண்ணது வெறும் 3,00,000 ரூபாய்தான். இப்போ அதோடு வேல்யூ சுமாரா 6.8 லட்சம் ரூபாய். இதையும் ஒரு நல்ல லிக்விட் ஃபண்டுல இன்வெஸ்ட் பண்ணிட்டேன். லிக்விட் ஃபண்டிலிருந்து வருஷத்துக்கு 8% லாபமா, 54,400 ரூபாய் கிடைக்குது. இந்த பணத்தை  வச்சுதான் வருஷத்துக்கு 8 செட் டிரஸ் (16*1000 = 16,000), இரண்டு வருஷத்துக்கு ஒரு நல்ல போன் (12,000/2 = 6,000) வாங்குறேன்.


சுந்தர்: டேய் அப்போ டிரஸ், போன் போக கையில இன்னும் 32,400 ரூபாய் இருக்குமே, அத என்னடா பண்ணுவ?


ரமேஷ்: போன் வாங்குனா போதுமா, போனுக்கு ரீசார்ஜ் பண்ண வேண்டாமா, டேட்டா கார்ட் போட வேண்டாமா சோ அந்த செலவு மாசத்துக்கு ஒரு 1,000 (வருஷத்துக்கு 1000*12 = 12,000) ரூபாய். பாக்கி 20,000 இந்த கார்பஸை மெயின்டெயின் பண்றதுக்காக, 2012-ல் இருந்து நல்ல ஈக்விட்டி ஃபண்டுல இன்வெஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்.


சந்தோஷ்: ஏற்கெனவே உனக்கு கார்பஸ் இருக்கே அதுக்கப்புறமும் எதுக்கு இன்வெஸ்ட் பண்ற?


ரமேஷ்: என்ன மச்சான் அப்புடி கேட்டே. பணவீக்கம்ன்னு ஒன்னு இருக்கறதையே மறந்துட்டியா. வருஷத்துக்கு 6% நம்ம பணத்தோடு வேல்யூ குறைஞ்சுக்கிட்டே இருக்கும். அதுக்காகதான் இந்த 20,000 ரூபாய் ரீ-இன்வெஸ்ட்மென்ட்.


சந்தோஷ்:  ஆக நீ டிரஸ், ஷூ, செப்பல், போன், ரீசார்ஜ், டேட்டா கார்ட் இதுக்கெல்லாம் நீ செலவே பண்றதில்லை.


ரமேஷ்: எக்ஸாட்லி. மச்சான் என்னை மாதிரி நீங்க அப்பவே நல்ல வருமானம் தர்ற மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தை போட்டிருந்தா, இப்ப என்னை மாதிரி சூப்பரா இருந்திருக்கலாம். இப்பவும் ஒன்னும் கொறஞ்சுடலை. இப்ப பணத்தை சேர்க்க ஆரம்பிங்க. ரிட்டயர்ட்மென்ட் லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.


சுந்தர்: மச்சி, எங்க கண்ணைத் தொறந்துட்டே, இன்னைக்கு எங்க முதலீட்டை ஆரம்பிச்சுடறோம்.


சந்தோஷ்: நானும் ரெடி; ஆபிஸ் முடிஞ்சவுடனே அதுக்கான வேலையில எறங்குறோம். ஓகேயா?

 

மு.சா. கௌதமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ