Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமானத்துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்த அரசு திட்டம்

விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 50 சதவிகிதத்திற்கும் மேல் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்துள்ளது. அதில் ஏர்லைன்ஸ் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகளுக்கு வரி,உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவிகித லெவி வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை  50 சதவிகிதத்திற்கு  மேல்  அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் விமான சேவையை பயன்படுத்தும் வகையில் உள்நாட்டு விமான சேவைக்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ