Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெனால்ட் கிவிட்: 5 வாரத்தில் 50,000 கார் முன்பதிவு

ரெனால்ட் நிறுவனம் க்விட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. நான்கு வகையான மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் ஆரம்பவிலை 2.57 லட்ச ரூபாயில் இருந்து 3.53 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டு 5 வாரத்தில் இதுவரை 50 ஆயிரம் முன்பதிவு நடைபெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது ரெனால்ட் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு 2 சதவிகிதமாக உள்ளது. ரெனால்ட் க்விட் கார் அறிமுகம் மூலம் 2017ம் ஆண்டு இந்திய சந்தை மதிப்பில் 5 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என்று ரெனால்ட் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ