Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேகி விவகாரத்தால் லாபத்தை இழந்தது நெஸ்லே

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக நெஸ்லே இந்தியா நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. இப்போது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகள் குறித்து நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,557.80 கோடியாக இருந்த்து. இப்போது வருவாய் 32 சதவிகிதம் சரிந்து ரூ. 1,736.20 கோடியாக குறைந்துள்ளது.


அதுபோல் நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற ஆண்டு ரூ. 311.29 கோடியாக இருந்தது. இப்போது நிகர லாபம் 60 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து ரூ. 124.20 கோடியாக குறைந்துள்ளதாக அந்றுவனம் தெரிவித்தது.


நெஸ்லே இந்தியா தயாரிப்பான மேகி நூடுல்ஸ் தரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டதும் அதன் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் வருவாய் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close