Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.ஓ. தரக் குறியீடு

புதுசா ஐ.பி.ஐ. வர்ற நிறுவனங்களைப்பத்தி முதலீட்டாளர்கள் தெரிஞ்சுக்கணும்ங்குறதுக்காக, செபி சில கட்டுப்பாடுகள் வச்சிருக்கு. அதாவது இந்த மாதிரி கம்பெனி-களோட தரத்தை அலசி ஆராயவே சில நிறுவனங்கள் இருக்கு.

அவங்ககிட்ட, ஐ.பி.ஓ-க்கு வர்ற ஒவ்-வொரு நிறுவனமும் கட்டாயம் தரக்குறியீடு வாங்கியாகணும். இந்த தரக்குறியீட்டை வச்சு நாம ஓரளவுக்கு அந்த நிறு-வனத்தைப்பத்தி முடிவுக்கு வரமுடியும்.

இந்த தரக் குறியீடு, க்ரைசில், இக்ரா, கேர், ஃபிட்ச் போன்ற நிறுவனங்களால வழங்கப்படுது. மொத்தம் 5 மார்க். அதுல ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு மார்க் வாங்குதுங்குறதைப் பொறுத்து அதோட தரத்தை முடிவு செஞ்சுக்கலாம்.

1 / 5- ஃபெயில் மார்க். அடிப்படையே சரியில்லாத கம்பெனின்னு அர்த்தம்.

2 / 5- தத்தி தத்தி நடக்குற வகை. சராசரிக்கும் கம்மியா அடிப்படை கொண்ட நிறுவனம்.

3 / 5- ஓகே. பரவாயில்லை ரகம். சராசரியான அடிப்படை கொண்ட நிறுவனம்.

4 / 5- குட். இந்த வகை கம்பெனிக்கு சராசரிக்கு மேலான அடிப்படை இருக்குன்னு அர்த்தம்.

5 / 5- வெரிகுட். அடிப்படை வலிமையான நிறுவனம்.

ஒரு முக்கியமான விஷயம்.. இந்த தரக் குறியீடுங்குறது ஒரு நிறுவனம் அடிப்படையா நல்லாயிருக்கா, இல்லை-யாங்குறதைப் பத்தினது மட்டும்-தான். நிறுவனம் நல்லா-யிருந்தா, அதோட வளர்ச்சி நல்லா-யிருக்கும், அதன்மூலமா அந்த நிறு-வனத்தோட பங்கு விலை ஏறி, பணம் போட்டவங்களுக்கு லாபம் தரும்.. அப்படிங்குறதுதான் இந்த தரக்-குறியீட்டைப் பார்க்குறதுக்கான நோக்-கம். ஆனால், இந்த குறியீட்டுக்கும், ஐ.பி.ஓ-வுக்கு வர்ற நிறுவனத்தோட பங்கு விலைக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் இல்லைங்குறதைப் புரிஞ்சுக்கணும். ஐ.பி.ஓ-க்கு வந்த பின்னாடி அந்த நிறுவனத்தோட பங்கு விலைங்குறது, அதோட எதிர்காலச் செயல்பாடுகளைப் பொறுத்துதான் இருக்கு.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி இணைப்பு புத்தகத்தில் இருந்து)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ