Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ லாபம் அதிகரிப்பு

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டு முடிவில் 12 சதவிகிதம் உயர்ந்து 3,030 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,709 கோடி ரூபாயாக இருந்தது. 


எப்எம்சிஜி துறையை சேர்ந்த ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 0.25 சதவிகிதம் மட்டுமே உயர்ந்து 2,431.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 


பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 15.5 சதவிகிதம் உயர்ந்து 996 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 861 கோடி ரூபாயாக இருந்தது. 


செப்டம்பர் காலாண்டில் கோடக் மகேந்திரா வங்கியின் நிகர லாபம் 31 சதவிகிதம் உயர்ந்து 942 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ