Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவிய ஐபிஎல் டி20 கிரிக்கெட்!

2015ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி 60 நாட்கள் நடந்தது. இந்த 'ஐபிஎல் 2015' கிரிக்கெட் போட்டி ரூபாய் 1,150 கோடி அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பினை அளித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு முன்னதாக, இந்திய பொருளாதாரத்தில் 'ஐபிஎல் 2015' எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மதிப்பிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டது. இந்த ஆய்வு மேற்கொள்ள கேபிஎம்ஜி விளையாட்டு ஆலோசனைக் குழுவை பிசிசிஐ நியமித்திருந்தது.


இந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, 'ஐபிஎல் 2015' கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) ரூபாய் 1,150 கோடி அளவில் பங்களிப்பினை அளித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ