Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதியை ஊக்குவிக்க 3,000 கோடி ரூபாய் அரசு அறிவிப்பு

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் முதல் நாட்டின் ஏற்றுமதி  குறைந்து வருகிறது. எனவே நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் 3,000 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்த கொள்கையில் சில மாற்றம் செய்ய வேண்டும் என்று தொழில்துறையயினர் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் திருத்தம் செய்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் புதிய அறிவிப்பினை ஒன்று வெளியிட்டுள்ளது. 

அதில், ஜவுளி, மின்னணு சாதனங்கள், தொலைத்தொடர்பு, மருந்து உட்பட 110 பொருள்களுக்கு ஏற்றுமதிச் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் 3,000 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close