Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநராக சக்திகந்தா தாஸ் நியமனம்

மத்திய வருவாய்த்துறை செயலாளர் சக்திகந்தா தாஸ், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் பிரச்னைகள் அனைத்தும் அதன் மத்திய இயக்குநர்கள் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதன் வாரிய இயக்குநர்கள் மத்திய அரசால் ரிசர்வ் வங்கி விதியின்படி நியமிக்கப்படுகின்றனர்.4 வருடங்களுக்களுக்கு ஒரு முறை வாரிய இயக்குநர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் துறையின் செயலாளர் சக்திகந்தா தாஸ், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநராக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த பரிந்துரையை ஏற்று 2015 அக்டோபர் 30ம் தேதியில் இருந்து ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநராக சக்திகந்தா தாஸ் செயல்படுவார் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மத்திய வாரியத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சக்திகந்தா தாஸ் தமிழ்நாட்டின் 1980 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ