Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முட்டை இறக்குமதி மீதான தடையை விலக்கியது குவைத்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை மீதான தடையை குவைத் அரசு விலக்கியுள்ளது.

இது குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய வளைகுடா  நாடுகள் (ஜிசிசி)  தடை விதித்தன. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் மிகவும் நோயுண்டாக்கும் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பில்லை என்று 'வேர்ல்ட் ஆர்கனிசேஷன் பார் அனிமல் ஹெல்த்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை மீதான தடையை குவைத் அரசு விலக்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டையில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நாமக்கலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முட்டை ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 288.12 லட்சமாக இருந்தது. 2014-15 ல் 175.55 லட்சமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதம் வரை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தகவலின் படி, 140.12 லட்சம் என்ற அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ