Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்ஆர்ஐளும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்!

வெளிநாடு வாழ் இந்தியர்களும் (என்ஆர்ஐ) தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களுடைய ஓய்வு கால பணத் தேவைகளை சமாளிப்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு  'தேசிய ஓய்வூதியத் திட்டம்' கொண்டு வரப்பட்டது. இப்போது, இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சேர்ந்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிலுள்ள தங்களுடைய வங்கிக் கணக்கில் வழக்கமாக பணம் செலுத்தும் முறையிலேயே ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவையும் செலுத்தலாம் என்றும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு  6,000 ரூபாய் முதல் செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ