Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன விற்பனையை அதிகரிக்குமா 7வது ஊதிய கமிஷன்?

மத்திய அரசு, ஊழியர்களுக்கு  நிலுவை மற்றும் சம்பள உயர்வு அளிக்கும்போது அதிக வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உதாரணமாக, மத்திய அரசு 2008ம் ஆண்டில் 6வது ஊதியக் கமிஷன் அறிக்கை செயல்படுத்தப்பட போது, பயணிகள் வாகனங்கள் விற்பனை 19.45 சதவிகிதம் உயர்ந்து 22.20  லட்சமாக அதிகரித்துள்ளது.
 
அதுபோல் 2008-09ல் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 16.11 சதவிகிதம் உயர்ந்து 97 லட்சமாக  அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

இப்போது மத்திய அரசு, 7வது ஊதிய கமிஷனில் ஊழியர்களுக்கு நிலுவை மற்றும் சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
ஆகையால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முனைப்போடு காத்திருக்கிறது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ