Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோனி : புதிய ஹெட்போன் மற்றும் இயர்போன்கள்

சோனி இந்தியா தனது ஆடியோ பிரிவை மேம்படுத்தும் வகையில் புதிய வகை ஸ்டைலிஷ் ஹை ரெசொல்யூஷன் ஆடியோ ஹெட்போன் மற்றும் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஹெட்பேண்ட் வகை ஹெட்போனில் ஹெச் இயர் ஆன், ஹெச் இயர் இன் என்சி எரர், நாய்ஸ் கேன்சலிங் போன்ற மாடல்களும், இயர்போன்களில் ஹெச் இயர் இன் என்சி மற்றும் ஹெச் இயர் இன் போன்ற மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாடிக்கையாளரின் இசை ஆர்வதை இன்னும் மெருகேற்றும் வகையிலும், இசையை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தையும் இந்த ஹை ரெசொல்யூஷன் ஆடியோ ஹெட்போன் மற்றும் இயர்போன்கள் இருக்கும் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரு.6,990.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ