Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காபி டே பங்குகள் 15% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய காபி ரெஸ்டாரண்ட் நிறுவனமான கேப் காபி டே என்டர்பிரைசஸ் 1,150 கோடி ரூபாயை புதிய பங்குகள் வெளியீடு மூலம் (பங்கின் விலை பட்டை 316 - 328 ரூபாய்க்கு) 14 அக்டோபர் 2015ல் தொடங்கி 16 அக்டோபர் 2015 ஆகிய தினங்களில் திரட்டியது. இந்த ஐபிஓ ஒட்டு மொத்தமாக 1.63 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது (Over subscribed) என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்குகளில் வெறும் 90 சதவிகித பங்குகளுக்கு மட்டும் தான் விண்ணப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்குகளுக்கு  4.6 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது.

காபி டே வெளியிட்ட இந்த ஐபிஓவிற்கு முன்பே 334 கோடி ரூபாயை ஆன்கர் இன்வெஸ்டார்கள் (Anchor Investor) மூலம் திரட்டி இருக்கிறார்கள். அதோடு நந்தன் நிலக்கனி மற்றும் ராகேஷ் ஜூன்ஜுன் வாலாவின் நிறுவனமான ரேர் என்டர்பிரைசஸ் மூலம் 100 கோடி ரூபாயை திரட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று 317  ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட  காஃபி டே என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் தற்போது 15 சதவிகிதத்திற்கு மேல்/ 273 ரூபாய்க்கு இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.  அதே நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ