Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லைஃப் இன்ஷூரன்ஸ் க்ளைம் : ஐஆர்டிஏ அதிரடி

 
 
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயமாக  பாலிசிதாரர்களுக்கு  க்ளைம் வழங்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது.
 
ஐஆர்டிஏ-வின் இந்த புதிய உத்தரவின் மூலம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்கள் மீது க்ளைம் தொடர்பாக எந்தவிதத்திலும் குற்றம் சுமத்த முடியாது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கவும் முடியாது.
 
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் மோசடி அல்லது தவறான தகவல் அளித்து இருந்தால் அதை காப்பீட்டு நிறுவனங்கள் 3 ஆண்டு கால கெடு நேரத்திற்குள் கண்டறிந்து அதை செயல்படுத்த வேண்டும்.  க்ளைம் தொடர்பாக எந்த விதிவிலக்கும் இருக்கக் கூடாது என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ